Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுதன் முதலாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்காரஸ்...

    முதன் முதலாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்காரஸ்…

    அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆடவர் சாம்பியன் பட்டத்தை அல்காரஸ் கைப்பற்றினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அதன்படி, ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூடை அல்காரஸ் வீழ்த்தினார். இது அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

    இதன் மூலம் அல்காரஸ் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்துக்கு    முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மிகக் குறைந்த வயதில் முதலிடம் பிடித்த வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார். அல்காரஸூக்கு வயது 19. 

    முன்னதாக, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதையும் படிங்க: ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை; மகிழ்ச்சியில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....