Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமூன்று வயது குழந்தைக்கு அந்த இடத்தில் நடந்த கொடூரம்; இப்படியும் ஆசிரியையா?

    மூன்று வயது குழந்தைக்கு அந்த இடத்தில் நடந்த கொடூரம்; இப்படியும் ஆசிரியையா?

    கர்நாடக மாநிலம், தும்கூரில் 3 வயது குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்து காயப்படுத்திய அங்கன்வாடி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .

    கர்நாடக மாநிலம், சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவிலுள்ள கோடேகெரே கிராமத்தில், ஆதரவற்ற சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் மூலம், 17 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த தாய் மற்றும் தந்தையை இழந்து, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் மூன்று வயது குழந்தையும் அனுப்பப்பட்டுள்ளார் .

    அப்போது அக்குழந்தைக்கு அங்கு ஆசிரியரால் நிகழ்த்தப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தை எல்லாரையும் போல் தான் அங்கன்வாடி மைய்யத்திற்கு சென்று வருகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த பாட்டி சமீபத்தில் ஒரு நாள் தன் பேரனை குளிப்பாட்டும் போது அவனது தொடை மற்றும் ஆணுறுப்பில் தீக்காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து குழந்தையிடம் விசாரித்துள்ளார் .

    அப்போது குழந்தை அடிக்கடி ஆடையிலேயே சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி மையத்தின் உதவி ஆசிரியர் ரஷ்மி, விவரம் அறியா பிஞ்சு என்பதை கூட உணராமல், தீப்பெட்டி மூலம் தீக்காயங்களை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தி துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது.

    இது பற்றி குழந்தை யாரிடமும் சொல்லாத நிலையில், குழந்தையின் பாட்டி அம்மையத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார் . பாட்டியின் புகாரை அடுத்து, அப்பகுதியின் தாலுகா குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரின் பரிந்துரையின் பேரில் ரஷ்மியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்ததோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை துணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

    அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்- பிரதமர் மோடி புகழாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....