Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்த முறை பேட்ஸ்மென்களுக்கு 'நோ'; பவுலர்களுக்கு 'எஸ்' - உலகக்கோப்பையில் நிகழும் வானிலை மாற்றம்!

    இந்த முறை பேட்ஸ்மென்களுக்கு ‘நோ’; பவுலர்களுக்கு ‘எஸ்’ – உலகக்கோப்பையில் நிகழும் வானிலை மாற்றம்!

    இந்த முறை உலகக் கோப்பையில் பேட்ஸ்மென்களை விட, பவுலர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இருபது ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வழக்கமாகவே பேட்ஸ்மேன்கள்தான் ஆதிக்கம் செலுத்துவர். ஆனால், இம்முறை இந்த நிலை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு மாறாக பவுலர்கள் இம்முறை ஆதிக்கம் செலுத்துவர். 

    2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியானது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் குளிர்கால வானிலை நிலவும். இந்த வானிலையின் தாக்கம் ஆடுகளங்களில் ஏற்படும். 

    அதன்விளைவாக, உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும் பெர்த், பிரிஸ்பேன் மைதான ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மெல்போர்ன், சிட்னி, அடிலெய்டு ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கின்றன. 

    இதையும் படிங்க: சென்னையிலிருந்து 1.65 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்

    மேலும், பிரிஸ்பேன், அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் போன்ற மைதானங்களுடன் ஒப்பிடுகையில், பெர்த் வானிலை சற்று வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் 23-ம் தேதி மெல்போர்ன் பகுதியில் மழை பொழிவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் ஆட்டம் நடைபெறும் பட்சத்தில் அதில் நிச்சயம் பெளலர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். 

    குறிப்பாக, மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்களில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளத்தை பொறுத்தமட்டில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் முக்கியமில்லை. விக்கெட்டுகளிடையே ஓடி ரன்கள் சேர்ப்பதும் முக்கியத்துவம் பெறும். 

    இதையும் படிங்க: இத நான் சொல்லலாமானு தெரில’….விஜய் குறித்து மனம் திறந்த ‘கோமாளி’ பட இயக்குநர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....