Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா; ஜடேஜாவால் கிடைத்த வெற்றி!

    ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா; ஜடேஜாவால் கிடைத்த வெற்றி!

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 26.4 ஓவரில் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றது. 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

    இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது. மேலும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. 

    இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா, ஜடேஜா பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதற்கு பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் தொடர் விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 

    இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

    இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் அதிரடியாக 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். புஜாரா 31 ரன்களும், பரத் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    இந்திய அணி 26.4 ஓவரில் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றது. லயன் 2 விக்கெட்டுகளும், மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டி, மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்து. 

    பாடலாசிரியருக்கு விஜய் கொடுத்த அன்பு முத்தம்; வைரலான புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....