Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த பாலிவூட் பிரபலம்!

    ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த பாலிவூட் பிரபலம்!

    நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படம், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுவென்று நடந்து வருகிறது. 

    ஜெயிலர் திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் மட்டுமே நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போதோ ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில் மற்றும் தமன்னா போன்றோர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் உள்ளனர். 

    இந்நிலையில், பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஜெயிலர் திரைப்படத்தின் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துக்கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    முன்னதாக, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தேதியில் ஜெயிலர் ரிலீஸாகாது என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    jailer

    திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணி அதிக நாட்களை எடுக்கும் என்பதாலும், பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாலும் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    ‘சென்னை பஸ் செயலி’ சேவையை விரிவுபடுத்தப்பட போக்குவரத்துத்துறை திட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....