Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வேட்டிய மடிச்சு கட்டி... துள்ளி குதித்து கபடி ஆடிய எச்.ராஜா ! பிரதமர் விழாவில் நடந்த...

    வேட்டிய மடிச்சு கட்டி… துள்ளி குதித்து கபடி ஆடிய எச்.ராஜா ! பிரதமர் விழாவில் நடந்த சுவாரஸ்யம்

    புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் எச். ராஜா வேட்டியை மடித்துக் கொண்டு ரெய்டராக களமிறங்கி கபடி விளையாடினார். 

    பிரதமர் நரேந்திர மோடி 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 

    இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பாக கபடி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.  இந்த கபடி போட்டி தொடக்க விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கலந்துகொண்டார். 

    இதையும் படிங்க: ‘இனி நான் உதவி பெறுபவர்களின் காலில் விழ போகிறேன்’- ராகவா லாரன்ஸ் புதிய முடிவு!

    அப்போது, கபடி போட்டி தொடங்குவதற்கு முன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் வேட்டியை மடித்துக் கொண்டு கபடி விளையாடினார். ரெய்டராக களமிறங்கிய எச்.ராஜாவை, எதிரில் நின்ற பாஜக நிர்வாகி பிடிக்க முயல, அவரிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பித்து எச்.ராஜா எல்லைக் கோட்டை தொட்டார். இதன் பின்னர் உற்சாகமடைந்த பாஜக நிர்வாகிகள், எச்.ராஜாவை தூக்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா தெரிவித்துள்ளதாவது :

    எனக்கு மிகவும் பிடித்தது கோட்டை தாண்டி தொட்டு பி(அ)டிப்பதே. புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டதிலும் விளையாண்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....