Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தொடரின் இடையே ஆபாச படம் பார்க்கும் காணொளி வைரல்

    பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தொடரின் இடையே ஆபாச படம் பார்க்கும் காணொளி வைரல்

    திரிபுரா சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் கூட்டத்தொடரின் இடையே ஆபாச படம் பார்க்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வடக்கு திரிபுராவைச் சேர்ந்த ஜதப் லால் நாத். இவர் பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் ஆவார். 

    இந்நிலையில் இவர் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்பொழுது  ஆபாச படம் பார்க்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்தக் காணொளியில், சபாநாயகர் பிஸ்வ பந்து சென் உள்ளிட்டோர் குரலும் மிக தெளிவாக கேட்கின்றது. சக உறுப்பினர்கள் மத்தியில், சிறிது நேரம் மடியில் செல்போனை விரித்து ஆபாச படம் பார்க்கும் ஜதப் லால், அதையடுத்து மேசை மீதே செல்போனை வைத்து ஆபாச படம் பார்க்கிறார். எப்போதாவது சபை நிகழ்ச்சிகளையும் கவனிக்கிறார்.

     

    இந்த காணொளியை பகிர்ந்தவர்கள் பொது நலன் கருதி ஆபாச படத்தை மட்டும் மறைத்து வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொளி வைரலானதை அடுத்து, திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் முதற்கட்டமாக ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.  

    கஞ்சா கடத்தியதாக மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....