Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கோவில் ஊழியர் கொலை - நிவாரணம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

    மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கோவில் ஊழியர் கொலை – நிவாரணம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

    கோவில் ஊழியர் கிருஷ்ணன், கோவில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஊழியர் கிருஷ்ணன், கோவில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோவில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

    மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது; 

    தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடக்கிறது என்பது ஒரு புறம். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து, கோவில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. 

    தமிழகம் முழுவதும், சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச் செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது. 

    இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவி

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....