Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பையில் மாஸ் காட்டிய இந்தியா; உலகக் கோப்பைக்கு என்ட்ரி!

    ஆசியக் கோப்பையில் மாஸ் காட்டிய இந்தியா; உலகக் கோப்பைக்கு என்ட்ரி!

    ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய, ஆசிய அளவிலான 6-வது கூடைப்பந்து போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 ஆசிய கோப்பை தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. இதன் விளைவாக இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியிலும் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஜோர்டானை வீழ்த்தியது.

    இதன்பிறகு, அரையிறுதியில் சீன தைபேவுடன் மோதியது. இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 21-20 என்ற கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது. 

    இதைத்தொடர்ந்து, இறுதிப்போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியிலும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21-17 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியை தழுவியது. இருப்பினும், வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.

    மேலும், இந்த ஆசிய சர்வதேச கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றதன் அடிப்படையில் உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தது இந்திய அணி. இதன் மூலம், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாகத் தகுதிபெற்றுள்ளது.

    இதையும் படிங்க: முகமது ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தமைக்கு காரணம் என்ன? – ரோஹித் சர்மா சொன்ன பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....