Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுத பூஜை சிறப்பு சந்தை தொடக்கம்.. சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    ஆயுத பூஜை சிறப்பு சந்தை தொடக்கம்.. சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    சென்னை : ஆயுத பூஜையை ஒட்டி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குறைவான விலையில், நிறைவான சலுகைகளுடன் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்கான சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக வியாபாரிகளும், பொதுமக்கள் அலைமோதத் தொடங்கியுள்ளன.

    தமிழகம் முழுவதும் வரும் 4-ஆம் அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ளதை அடுத்து ,அதற்காக சிறப்பு பேருந்துகள் ,ரயில்கள் இயக்ககம் தொடர்பான அறிவிப்புகள் தினம் ஒரு அறிவிப்பாக வந்து கொண்டுதான் இருக்கின்றன . இந்த பரபரப்பான நிலையில்தான், எப்பவுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் கோயம்பேடு மார்க்கெட்டிலும், தினம் ஒரு அப்டேட்டுகள் ஆயுத பூஜைக்காக வெளியாகி கொண்டே இருக்கின்றன.

    அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வரும், பூ சந்தை வளாகத்தில் ஆயுத பூஜைகான சிறப்புச் சந்தை திறக்கப்பட்டுள்ளது . இச்சந்தை வருகிற 9-ந் தேதி வரை அதாவது 10 நாட்களுக்கு செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி , மதுரை, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் 100 லாரிகளில் அவல், பொரி, கடலை, உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டு ,தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு மொத்த வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுமட்டுமின்றி நாளை (அக் 01) முதல் வாழை கன்றுகள், தோரணங்கள், பூசணிக்காய், வாழைத்தார், பழங்கள் போன்றவை அதிக லாரிகளில் கொண்டுவரப்பட்டு ,அதன் பின்னரே ஆயுத பூஜைகான விற்பனை இன்னும் சூடு பிடிக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த சிறப்பு சந்தையால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவதோடு, ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கிச்செல்லவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏதுவாக இருக்கும்.

    விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் என தொடர்ந்து வரும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இதுபோன்ற சிறப்பு சந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் அமைப்பது வழக்கம் .கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக இதுபோன்ற சிறப்பு சந்தைகள் அமைக்க அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லையாம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஏற்கனவே விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, சந்தை சிறப்பாக இயங்கியது. இதைத்தொடர்ந்து தற்போது ஆயுத பூஜைக்கும் சிறப்பு சந்தைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கோயம்பேடு பூ சந்தை வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் கலைகட்டத் தொடங்கியுள்ளது.

    இதை வெகுவாக வரவேற்றுள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும், சிறப்பு சந்தைக்கு சென்று பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கோயம்பேடு பூ மார்க்கெட் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.

    இதையும் படிங்க: காவி நிறம் பெரும் சென்னை விமான நிலையம்.. செக்-இன்-கவுன்டர்களில் தீட்டப்பட்ட வர்ணதினால் கிளம்பிய சர்ச்சை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....