Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் குவித்த அவிநாசி மாணவர்கள்!

    சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கம் குவித்த அவிநாசி மாணவர்கள்!

    சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில், அவிநாசியைச் சேர்ந்த 15 மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

    சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், கேரளம், ஜம்மு-காஷ்மீர், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

    இந்தப் போட்டியில் தமிழகம் சார்பில், அவிநாசி ராயம்பாளையம் சிங்கை கோதாமுத்து வாத்தியார் அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி சாலையைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் 8 முதல் 30 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனித்தனியே தங்கப் பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

    இதுமட்டுமின்றி, நேபாளம்-இந்தியாவுக்கு இடையேயான போட்டிகளில் அதிகப்படியான புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பதக்கத்தையும் பெற்றனர். மேலும் இதில், சிறந்த விளையாட்டு வீரருக்கான பதக்கத்தை அவிநாசி வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    தற்போது, வெற்றப்பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    சென்னையில் நடைபெற்ற தேசிய கால்பந்து போட்டியில் வாகை சூடிய மேற்கு வங்க அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....