Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கண்கவர் கலை படைப்பு; அவதார்-2 படம் கதாபாத்திர பொம்மைகளை தத்ரூபமாக செதுக்கி அசத்திய அரசு பள்ளி...

    கண்கவர் கலை படைப்பு; அவதார்-2 படம் கதாபாத்திர பொம்மைகளை தத்ரூபமாக செதுக்கி அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

    புதுச்சேரி: புதுச்சேரியில் பயனற்ற பொருட்களை கொண்டு அவதார்-2 படம் கதாபாத்திர பொம்மைகளை தத்ரூபமாக செதுக்கி அசத்தி உள்ளனர் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள்.

    புதுச்சேரி கிராம்புரத்தில் சத்தமின்றி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ஒரு அரசு பள்ளி. சேலியமேடு கிராமத்தில் இயங்கி வரும் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது. கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய வீணாகும் சுரக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் உலர்ந்த இலை, பூ, மட்டைகளை கொண்டு கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

    ஒ “அழிவின் உயிர்ப்பு’ என்ற பெயரில் இப்பள்ளியில் இயங்கும் கலைக்கூடம் அசத்தும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் சுற்றுலா தளமாகவே மாறிவிட்டது. பயிற்சிப் பட்டறையில் மாணவ, மாணவிகள் உருவாக்கும் வித்தியாசமான கலைபடைப்புகள் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் அவதார்-2 படத்தை வரவேற்கும் விதமாக இங்குள்ள மாணவர்கள் நவநீத கிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோர் அவதார் பொம்மைகளை உருவாக்கி அசத்தியுள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட அவதார் பட நாயகர்களை தெருக்கோடியில் கிடைக்கும் பயனற்ற பொருட்களை கொண்டு இவர்கள் தத்ரூபமாக படைத்துள்ளனர்.

    அவதார் படத்தை பார்த்த போது அதில் வரும் கதாபாத்திரங்கள் மனதில்
    ஏறிவிட்டன. பயனற்ற பொருட்களை கொண்டு அவதார் கதாபாத்திரங்களை உருவாக்கலாமா என பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதியிடம் கேட்டதற்கு அவர் ஊக்கமளித்தார் என மாணவர்கள் கூறுகின்றனர்.

    மதுக்கடைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; அரசை கண்டித்து போராட்ட களத்தில் குதித்த பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....