Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅசாமில் தொடரும் கனமழை: முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவு!

    அசாமில் தொடரும் கனமழை: முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவு!

    மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது‌. குளங்களும், ஏரிகளும் நிரம்பி வழியும் நிலையில், சில முக்கியமான ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌.

    அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில், 55 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில், வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக, பல பகுதிகளில் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கயுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அசாமில் ஏறபட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அசாம் அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பில், இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளிகளில் கோடை விடுமுறையை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது அசாம் அரசு. அதாவது, ஜூன் 25 முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை கோடை விடுமுறை மாற்றப்பட்டுள்ளது. அசாமில் ஏறபட்ட கடுமையான வெள்ளத்தையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை 5 நாட்களுக்கு முன்பாகவே அளிவித்து உத்தரவிட்டுள்ளது அசாம் மாநில அரசு.

    முன்னதாக, ஜூலை 1 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளம் காரணமாக இந்த கோடை விடுமுறை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை ஜூன் 25 முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை என மாற்றப்பட்டுள்ளது.

    தொடர் மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கடந்த வாரம் அசாமில் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையின் தீவிரம் குறையாத நிலையில், தற்போது கோடை விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    கௌஹாத்தி பல்கலைக்கழகம் நடத்தி வரும் சில தேர்வுகள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கான உடற்தகுதி உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    சூரிய சக்தியில் இயங்கும் காரினை வடிவமைத்த இந்திய ஆசிரியர்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....