Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆசிய அளவிலான போட்டியில் வென்ற காஞ்சிபுர மாணவர்கள்; பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

    ஆசிய அளவிலான போட்டியில் வென்ற காஞ்சிபுர மாணவர்கள்; பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

    ஆசியப் போட்டிகளில் வென்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

    காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் நீனா. இவரின் தந்தை நீலகண்டன். 19 வயதாகும் நீனா, கிக்பாக்சிங் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். 

    நடப்பு டிசம்பர் மாதத்தில் தாய்லாந்தில் 10-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரையில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங்  போட்டியில் சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் உள்பட 20 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியாவின் சார்பாக கிக்பாக்சிங் வீராங்கனை நீனா கலந்துக்கொண்டார். 

    வெறுமனே கலந்துக்கொண்டதோடு நில்லாமல், இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நீனாவைத் தொடர்ந்து, உத்தரமேரூரில் உள் அக்சயா கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர் வெங்கடேசன் மகன் சரத்ராஜ் என்பவர் ஆசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

    இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த இருவரையும்,  காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ், கிக்பாக்சிங் பயிற்றுநர் அருண் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

    ‘குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு திருமணம்? ‘ – அமைச்சரின் பேச்சுக்கு ராமதாஸ் ஆதரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....