Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமோதலில் முடிந்த ஆசியக்கோப்பை போட்டி; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் காயம்..

    மோதலில் முடிந்த ஆசியக்கோப்பை போட்டி; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் காயம்..

    ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வரும் இச்சமயத்தில், நேற்று ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்க்க, அடுத்து பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருள்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். மேலும், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இருக்கைகளை கொண்டு தாக்கியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மைதானத்திற்கு வெளியே சாலைகளில் மோதிக் கொண்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ள ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, அகமது வீசிய பந்தில் அலி சிக்ஸர் விளாசிய பிறகு அவரை சீண்டினார். அதற்குப் பதிலாகவே தனது பௌலிங்கில் அலி வீழ்ந்ததும் அகமது அவரைச் சீண்டினார். 

    இந்நிலையில் இந்த நிகழ்வுகளெல்லாம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: வெற்றி பெற்ற பாகிஸ்தான்.. தொடரை விட்டு வெளியேறிய இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....