Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கையிடம் போராடி தோற்ற இந்தியா; இனி பைனல் வாய்ப்பு உண்டா?

    இலங்கையிடம் போராடி தோற்ற இந்தியா; இனி பைனல் வாய்ப்பு உண்டா?

    இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இத்தொடரில் நேற்று இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் பலப்பரீட்சை நடந்தது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆகவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த்து. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்து எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி ரன்கள் சேர்க்காமல் ஸ்டம்பை பறிகொடுக்க, 13 ரன்களுக்கே இரு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

    இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மறுபுறம் ரோஹித் சர்மா சற்றே அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பார்ட்னர் ஷிப் 97 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரோஹித் அரைசதம் கடந்து 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    இதன்பிறகு, ஹார்திக் பாண்டியா களமிறக்கப்பட  மறுபுறம் சூர்யகுமார் 34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 17 ரன்களுக்கும், தீபக் ஹூடா 3 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி விக்கெட்டாக புவனேஷ்வர் குமார் டக் அவுட்டானார். ஆட்ட முடிவில் அஸ்வின் 1 சிக்ஸருடன் 15, அர்ஷ்தீப் சிங் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷங்கா 3, சமிகா கருணாரத்னே, டாசன் ஷனகா ஆகியோர் தலா 2, மஹீஷ் தீக்ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர், 174 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் தொடக்க வீரர்களான பாதும் நிசங்கா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52, குசல் மெண்டிஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினர். 

    இதனிடையே சரித் அசலங்கா 0, தனுஷ்கா குணதிலகா 1 ரன்னுக்கு வீழ்ந்தாலும், முடிவில் பானுகா ராஜபட்ச 2 சிக்ஸர்களுடன் 25, கேப்டன் டாசன் ஷனகா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். இந்திய தரப்பில் யுஜவேந்திர சஹல் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    தற்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு இறுதிச்சுற்றுக்கு வாய்ப்புள்ளது. அதிலும், பாகிஸ்தான் புதன்கிழமை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெல்லும் பட்சத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் வெளியேறுவது உறுதியாகிவிடும்.

    அடுத்த சீசனிலும் தோனிதான் கேப்டன் – சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....