Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் திடீர் திருப்பம்.. காவல் ஆய்வாளருக்கு கொள்ளையில் பங்கா?

    சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் திடீர் திருப்பம்.. காவல் ஆய்வாளருக்கு கொள்ளையில் பங்கா?

    சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கடந்த 13-ம் தேதி கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த கொள்ளையில், ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்கள் வெளிவந்தது.

    இதைத் தொடர்ந்து, இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், கொள்ளையர்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அரும்பாக்க கிளை ஊழியர் கொரட்டூர் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன. அதைச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்

    இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை காவல்துறையினர் திங்கள் கிழமை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் இருந்த 4 பேரையும் காவல்துறை தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதைத் தொடர்ந்து, இவ்வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த முருகனின் நெருங்கிய கூட்டாளியான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதன்பின்பு இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    இந்நிலையில், அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைகள் கொள்ளையில் காவல் ஆய்வாளர் அமல்ராஜூக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தற்போது காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....