Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்5000 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் கண்டுபிடிப்பு

    5000 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் கண்டுபிடிப்பு

    ஈராக்கில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 5000 ஆண்டுகள் பழமையான குளிர்சாதன பெட்டியுடன் ஒப்பிடக்கூடிய ஈரப்பத அமைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 

    பண்டைய ஈராக்கின் சுமேரிய நாகரிகத்தின் ஆரம்பகால நகர்ப்புற மையங்களில் ஒன்றாக அறியப்பட்ட சமகால நகரமான நசிரியாவின் வடகிழக்கில், பண்டைய லகாஷ் இடிபாடுகளில் அமெரிக்க-இத்தாலிய குழு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. 

    இந்த அகழ்வாராய்ச்சியில் பல்வேறு வரலாற்று கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கண்டுபிடிப்பின் ஒரு பகுதியாக 5000 ஆண்டுகள் பழமையான ஈரப்பதம் கொண்ட ஒரு அமைப்பும், உணவகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு  உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பயன்படுத்தப்பட்டதாக அகழ்வாராச்சியினர் கூறினர். 

    மேலும், இந்த கண்டுபிடிப்பை பலர் நவீனகால குளிர்சாதன பெட்டியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இதற்கு அருகில் மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் குழு கண்டுபிடித்தது. 

    இது குறித்து அந்த குழு தெரிவிக்கையில், நாங்கள் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டறிந்துள்ளோம். அதோடு, நூற்றுக்கணக்கில் பாத்திரங்களையும், அமர்வதற்கு ஏற்ற மேசைகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். குளிர்சாதன பெட்டிக்கு பின் ஒரு அடுப்பு போன்ற அமைப்பு உள்ளதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்தனர். 

    இதுமட்டுமல்லாமல், இந்த திறந்தவெளி மக்கள் சாப்பிட வரக்கூடிய இடம் என்றும் அது வீடு இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா; ஜடேஜாவால் கிடைத்த வெற்றி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....