Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பனில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து; அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயணிகள் படுகாயம்

    பாம்பனில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து; அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயணிகள் படுகாயம்

    ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

    ராமேஸ்வரத்தில் பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடல் அலையை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். அப்படி வருகையில், அவர்களின் வாகனங்களை பாலத்தின் இரு புறங்களிலும் நிறுத்துவதால், அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகிறது. 

    இந்நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

    இந்த விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுனர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    கடந்த 10 நாட்களில் பாம்பன் பாலத்தில் 2-வது முறையாக விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....