Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 

    அப்போது அவர், ஒரே நேரத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி இருப்பதாக திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். சிலிண்டர் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகின்ற அளவுக்கு குறைக்கப்படும் என திமுக கூறியதாகவும், தற்போது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி கூறினார். 

    மேலும் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வருகிற 9 ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12 ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். 

    அதே சமயம் வருகிற 13 ஆம் தேதி நகராட்சி, மாநராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார், பிராவோ… சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....