Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்!

    ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்!

    ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

    நேற்று ஆவின் நிறுவனத்தின் ப்ரீமியம் நெய் லிட்டருக்கு 50 ரூபாயும், 5 லிட்டருக்கு 350 ரூபாயும் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இதனால் நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இன்று மீண்டும் வெண்ணெய் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் சமையல் பயன்பாடிற்கான உப்பு கலக்காத வெண்ணெய், 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயக உயர்த்தபட்டுள்ளது. 

    இதேபோல் உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயக உயர்த்தியும், 200 கிராம் சிறிய வெண்ணெய் துண்டு 130 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

    இந்நிலையில், ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

    “தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் ஆவின் பால் பொருட்களின் விலை பலமுறை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

    தென் தமிழகத்தில் டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....