Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவை கதிகலங்க வைக்கும் ஜாம்பி மருந்து!

    அமெரிக்காவை கதிகலங்க வைக்கும் ஜாம்பி மருந்து!

    மருந்தை போதைப்பொருட்களாக உட்கொண்ட இளைஞர்களின் தோல் படிப்படியாக அழுகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோல்களில் துளைகளும் விழுந்துள்ளன. கிட்டத்தட்ட ஜாம்பிகளின் தோல் போன்று அவர்களின் தோல் மாறிவருகிறது.

    அமெரிக்காவில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மயக்க மருந்துதான் கைலாசின். இம்மருந்தை ‘ட்ரான்க்’ என்றும் அழைப்பர். குதிரை, பசு, பன்றி போன்ற விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் முன் மயக்க மருந்தாக இந்த கைலாசினை உபயோகிப்பர். அமெரிக்காவில் பல மருந்தகங்களில் இந்த கைலாசின் தற்போது கிடைக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க இளைஞர்கள் பலர் இந்த கைலாசின் மருந்தை போதைப்பொருளாக உட்கொண்டு வருவது தெரிய வந்திருக்கிறது. இம்மருந்துடன் வேறு சில கூட்டுப் பொருட்களையும் சேர்த்து அமெரிக்க இளைஞர்கள் உபயோகித்து வருகின்றனர்.

    இதனால், நாளடைவில் மருந்தை போதைப்பொருட்களாக உட்கொண்ட இளைஞர்களின் தோல் படிப்படியாக அழுகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோல்களில் துளைகளும் விழுந்துள்ளன. கிட்டத்தட்ட ஜாம்பிகளின் தோல் போன்று அவர்களின் தோல் மாறிவருகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் கைலாசின் மருந்தை ‘ஜாம்பி ட்ரக்’ (zombie drug) என கூறிவருகின்றனர்.

    மேலும், அமெரிக்காவில் தற்போது அதிகளவு புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக ‘ஜாம்பி ட்ரக்’ உருவெடுத்துள்ளது. இந்த மருந்தால் அமெரிக்க மக்கள் அச்ச மனப்பான்மையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லெஜெண்ட் சரவணன் லியோ படத்தில் இணைய வாய்ப்பா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....