Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிகணினி- மருத்துவர் ராமதாசு வலியுறுத்தல்

    தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிகணினி- மருத்துவர் ராமதாசு வலியுறுத்தல்

    தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளதாவது:  

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு  மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது  மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

    2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடி கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள் கூட நடப்பதாகத் தெரியவில்லை.

    இன்றைய கல்விச் சூழலில்  மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த வகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறப்பான திட்டம்.

    மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது.  தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிகணினி வழங்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    தொடங்கப் போகிறது பொறியியல் கலந்தாய்வு; குறைகிறதா கல்லூரிகளின் எண்ணிக்கை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....