Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘காசேதான் கடவுளடா’ - வெளிவந்த அஜித்குமாரின் துணிவு பாடல்..

    ‘காசேதான் கடவுளடா’ – வெளிவந்த அஜித்குமாரின் துணிவு பாடல்..

    அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திலிருந்து  ‘காசேதான் கடவுளடா’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் மிக வேகமான முறையில் உருவாகி வருகிறது. பொங்கல் வெளியிடாக, துணிவு திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் சார்ந்த புரோமஷன் பணிகளை தற்போது தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    இச்சூழலில்தான், துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். துணிவு திரைப்படத்தைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தெரியப்படுத்தி வந்தனர். 

    இதைத்தொடர்ந்து,  ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடி , வைசாக் வரியில் துணிவு திரைப்படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ எனும் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. சமூகவலைதளங்களில் ‘சில்லா சில்லா’ பாடல் தொடர்ந்து  ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், யூடியூப் தளத்தில் இப்பாடல் சாதனைகளை புரிந்து வருகிறது. 

    இந்நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து மற்றொரு பாடல் வெளிவந்துள்ளது. ‘காசேதான் கடவுளடா’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு வைசாக் வரிகள் மற்றும் குரல் கொடுக்க, நடிகை மஞ்சு வாரியரும் இப்பாடலுக்காக குரல் கொடுத்துள்ளனர். இப்பாடலும்,  தற்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    புரோ கபடி லீக்; புனேரி பல்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஜெய்பூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....