Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் எலான் மஸ்க்

    ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் எலான் மஸ்க்

    ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டம் திட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த ட்விட்டர் ஓப்பந்த பிரச்சினை தற்போது சுமூகமாகியுள்ளது. எலான் மஸ்க் விரைவில் ட்விட்டர் உரிமையாளராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, எலான் மஸ்க் பதவியேற்றதும் ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டம் திட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது சுமார் 2000-மாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபடவுள்ளார். அவற்றின் ஒரு படியே இந்த ஆட்குறைப்பு என கூறப்படுகிறது.

    இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

    ட்விட்டர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வருவாயை இரட்டிப்பாக்குவது தொடர்பான விவாதங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இணைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், நிறுவனம் முழுவதும் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: இனி இருமல் வந்தா ‘நோ’ மருந்து; 99 குழந்தைகள் பலியானதால் இந்தோனேசியா அதிரடி நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....