Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தானில் கனமழை; 10 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் கனமழை; 10 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

    ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வெள்ளத்தில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    கனமழை மற்றும் வெள்ளத்தால், நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மற்றும் நாட்டின் வடக்கே பரவானில் அதிக உயிரிழப்புகளும் சேதங்களும்  பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

    அதோடு, நான்கு பாலங்கள் மற்றும் எட்டு கிலோ மீட்டர் தொலைவு சாலை உள்பட ஒன்பது மாகாணங்களில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. 

    இதனிடையே, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நூரிஸ்தான் மாகாணத்தில், குனார் முதல் நூரிஸ்தானின் மையப்பகுதி வரையிலான சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான்  நாட்டின்பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....