Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅடையாறு பஸ் டிப்போ, வணிக வளாகமா மாறுகிறதா? - மெட்ரோ அளித்த பதில்

    அடையாறு பஸ் டிப்போ, வணிக வளாகமா மாறுகிறதா? – மெட்ரோ அளித்த பதில்

    அடையாறு பஸ் டிப்போவை  9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்றுவதாக வந்த தகவலுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    சென்னை முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அடையாறு பஸ் டிப்போ மிகவும் பழமையானது. 

    இதனால், அடையாறு பஸ் டிப்போவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இந்நிலையில், மெட்ரோ ரயில்  நிர்வாகம் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ  நிர்வாகம் கூறுகையில், ‘சென்னையில் உள்ள அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் சார்பில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் உண்மைத்தன்மை இல்லை.’ என்று தெரிவித்துள்ளது. 

    ‘தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதை..’ – வேட்டி, சேலை பிரச்சினை குறித்து எடப்பாடி அறிக்கை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....