Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக செய்வது ஒரு ஜனநாயக படுகொலை - அன்பழகன் காட்டம்..

    திமுக செய்வது ஒரு ஜனநாயக படுகொலை – அன்பழகன் காட்டம்..

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் மீது பொய் வழக்கு போட்ட விடியா திமுக அரசுக்கு, புதுச்சேரி அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது, அவர் தெரிவித்த்தாவது;

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் அதிகாரிகள் அமுல்படுத்தாமல் இருப்பதும், அந்த சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் நடவடிக்கையை கண்டும் காணாமல் விட்டு விடுவதும் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும் என்றும், ஒரு சட்டத்தை அவமதிக்கும் பொழுது பொதுமக்களுக்கு நீதித்துறை தண்டனை வழங்குவது சட்டப்படியான நிகழ்வாகும்.

    ஆனால், இருக்கும் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையில் இருந்து தவறும் பொழுது அவர்களுக்கு நீதித்துறை தண்டனை வழங்கினால் மட்டுமே சட்டத்தை முழுமையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினார்.

    மேலும், புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்கினால் திறந்தவெளி விளம்பரங்கள் வைப்பதில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

    இதனால், சாலைகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாகவும், பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய துறைகளின் அதிகாரிகள் அதை அமல்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.

    இதை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் உணர்ந்து இதில் ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  திறந்தவெளி பேனர் வைத்துள்ளவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் மீது செய்யாத ஒரு குற்றத்திற்காக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளதை புதுச்சேரி அதிமுகவினர் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த பொய் வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இப்படி செய்வது ஒரு ஜனநாயக படுகொலை.

    அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    பறவை காய்ச்சல் எதிரொலி; 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....