Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அம்மா ஆனார் நயன்தாரா! விக்னேஷ் சிவனின் 'ஹாப்பி' ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி..

    அம்மா ஆனார் நயன்தாரா! விக்னேஷ் சிவனின் ‘ஹாப்பி’ ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி..

    நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முறையே இயக்கத்திலும் நடிப்பிலும் உச்சத்தை அடைந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இச்சூழலில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்தனர். திருமணம் முடிந்தப்பின் ஹனிமூன் சென்றுவிட்டு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாகினர். 

    இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என்று குறிப்பிட்டு இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார். 

    இருவரும் குழந்தைகளை தத்து எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் பரவ, வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. 

    எது எப்படியாக இருப்பினும், ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க:ரஷ்யா-உக்ரைன் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்- கவிஞர் வைரமுத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....