Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'முஸ்லீம் மக்கள் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறோம்' - ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

    ‘முஸ்லீம் மக்கள் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

    நாங்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறோம்; முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். 

    ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், நாட்டில் மக்களை தூங்கையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பதாகவும் அதனால், அனைத்து சமுதாயத்தினருக்கும் பொருந்துமாறு பொதுவான மக்கள் தொகை கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், சமூக ரீதியாக மக்கள் தொகையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது முக்கிய பிரச்சனை என்றும் அதனை புறக்கணிக்க கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

    இந்நிலையில் இதற்கு பதிலத்திலுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, 

    “கருக்கலைப்பு செய்வது மிகப்பெரிய பாவம் என்று அல்லா எங்களுக்கு சொல்லியுள்ளார். முஸ்லீம்கள் இரண்டு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி விட ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

    இதையும் படிங்க:அம்மா ஆனார் நயன்தாரா! விக்னேஷ் சிவனின் ‘ஹாப்பி’ ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி..

    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடம் குழந்தைகள் பிறப்பு விகிதம் 2 சதவீதம் குறைந்துள்ளது. நீங்கள் வரலாற்றை தவறாக சித்தரிக்க முயன்றால், அது உங்களது தவறு. 

    2020 ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். அதில், எங்களுக்கு விருப்பமும் இல்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்து வருவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

    நீங்கள் வேலை வாய்ப்பையோ அல்லது சம்பள உயர்வையோ கொடுக்கவில்லை. நாட்டில் 50 சதவீத மக்கள் தங்களது சாப்பாடு மற்றும் மருந்துக்கு தங்களது பிள்ளைகளை நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்போவதில்லை. ஆனால் முஸ்லிம்களை தாக்குகின்றனர்” என தெரிவித்தார். 

    மேலும், உத்தரப்பிரதேசத்தில் மதர்ஸா சொத்துகளை கணக்கெடுப்பு நடத்துவதையும் கண்டித்த அவர், குரானை படிக்க வருமாறு மோகன் பகவத்தை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....