Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நான் உதயநிதியை சந்திக்கப் போறேன்' - திரையரங்குகள் சர்ச்சை தொடர்பாக வாரிசு பட தயாரிப்பாளர் முடிவு..

    ‘நான் உதயநிதியை சந்திக்கப் போறேன்’ – திரையரங்குகள் சர்ச்சை தொடர்பாக வாரிசு பட தயாரிப்பாளர் முடிவு..

    நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன் என வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். 

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. 

    இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா தான் . 

    அந்த வகையில் தற்போது, வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல, அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. 

    இந்த இரு திரைப்படங்களும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், எந்த திரைப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகிறதென்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 

    ஆனால், இதை மறுத்து வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகள் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று அமைச்சரும், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவன உரிமையாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

    ஆனால், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 600-க்கும் மேலான திரையரங்குகளில் துணிவு வெளியாகும் என்றும், வாரிசு 400 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இது வியாபாரம். நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாற்று மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டோம் என்ற முடிவை அம்மாநிலங்களின் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. இதனால், வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிக்கல் எற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இன்னல்களால் உருவான…உருவாகும் விஜய்யின் சினிமா வாழ்க்கை – ஒரு பார்வை..

    புரோ கபடி லீக்: இறுதிக்கட்டத்துக்கு முன்னேறிய அணிகள்..ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....