Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜெயிலர் திரைப்படத்தில் புஷ்பா வில்லன்.. வெளிவந்த அப்டேட்!

    ஜெயிலர் திரைப்படத்தில் புஷ்பா வில்லன்.. வெளிவந்த அப்டேட்!

    ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லாலை தொடர்ந்து, புஷ்பா திரைப்பட வில்லன் சுனிலும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

    மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு கடந்த மாதம் வெளியிட்ட வீடியோ  ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக சமீபத்தில் படக்குழு போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்தது. 

    இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுனில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. படக்குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளது. மேலும், இத்திரைப்படமானது, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....