Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘என்னய வச்சு செஞ்சாங்க’ - விழாவில் சிம்பு பேச்சு

    ‘என்னய வச்சு செஞ்சாங்க’ – விழாவில் சிம்பு பேச்சு

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்களுக்காக நிறைய ஆக்ஷன் காட்சிகளை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 

    வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், நேற்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். 

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிம்பு பேசியதாவது:

    ரெகுலர் கமர்ஷியல் படங்களுக்கு உண்டான எதுவுமே இந்தத் திரைப்படத்தில் இல்லை. இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறையாக ஒருநாள் முன்பாகவே திரைப்படத்தின் கேடிஎம் கிடைத்தது. இதை எல்லாம் பார்க்கும்‌போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகத்தில் தான் வாழ்கிறோமா என்று தோன்றுகிறது.

    இதையும் படிங்க: ‘இனி நான் உதவி பெறுபவர்களின் காலில் விழ போகிறேன்’- ராகவா லாரன்ஸ் புதிய முடிவு!

    காரணம், நான் அவ்வளவு வலியை கடந்து வந்துள்ளேன். சினிமாவில் வருவது போல் எனது வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சிம்பு உடலை குறைத்தார்; நன்றாக நடித்தார்‌ என்று எல்லாம் சொல்கிறார்கள்; ஆனால், இத்திரைப்படத்தில் என்னைத்தான் வைத்து செய்தார்கள். நிறைய காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டன. இப்படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்தால் தெரியும்.

    எனது நடிப்பை ஜெயமோகன் பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. எனது நடிப்புக்கு இதில் அதிக பாராட்டு வந்திருக்கிறது. இது நம்பிக்கையை தந்திருக்கிறது. இன்னும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும்.

    இதில், எனக்கு பிடித்த பாட்டும் மல்லிப்பூதான். இந்தத் திரைப்படம் குறித்து எனக்கு ஒரு பயம் இருந்தது. தட்டி விட நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க ஆட்கள் இல்லை. இரண்டாம் பாகத்தில் எனது ரசிகர்களுக்காக நிறைய ஆக்ஷன் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இது கேங்ஸ்டர் திரைப்படம் இல்லை எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதே முதல் பாகம். இந்தப்படத்தில் என் உடம்பை வைத்து ஒன்றுமே எழுத முடியாது. அந்த சில பேருக்கு சொல்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்கலாம். தனிப்பட்ட மனிதனை அவரது உருவத்தை வைத்து விமர்சனம் செய்வது மிகவும் தவறு. தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்க வேண்டாம்.

    இவ்வாறு, நடிகர் சிம்பு பேசியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....