Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் திலகம் சிவாஜி சொத்து விவகாரம்.. அதிரடியாக தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்

    நடிகர் திலகம் சிவாஜி சொத்து விவகாரம்.. அதிரடியாக தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்

    நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது, அவர்களது சகோதரிகள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது, அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

    வழக்குத் தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்பனை செய்துவிட்டார்கள் என்றும், இருவரும் தாங்களாகவே உயில் ஒன்றைத் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: வந்தியத்தேவனுக்கு வாழ்த்து செய்தி கூறிய அருண்மொழி வர்மன்!  

    இந்த வழக்கின்படி, சாந்தி தியேட்டர், மணப்பாக்கம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள 43 ஏக்கர் நிலங்கள், ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள், ஆபரணங்கள் ஆகியவற்றில் சிவாஜி கணேசனின் மகள்கள் பங்கு கோரினர். மேலும், ‘எங்கள் தந்தை சம்பாத்தியம் செய்த சொத்துகளை அவர்கள் விற்பனை செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்றும் அவர்கள் முறையிட்டனர். 

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இதற்கான தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும், நடிகர் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

    இந்நிலையில், இன்று (ஜூலை 17) இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    இதையும் படிங்க: உலகக் கோப்பை: முதல் ஆட்டத்திலேயே வெற்றிகொடி கட்டிய நமீபியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....