Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய்! ஜீவா சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..

    சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய்! ஜீவா சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..

    சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். 

    நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்தாக மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், விஜய் திரைப்படம் குறித்த ஒரு தகவலை தற்போது நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். ஜீவா ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ‘சர்கார் வித் ஜீவா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட ஜீவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    ஜீவாவிடம் ‘உங்கள் அப்பாவின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் 100வது திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா?‘ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் 100-வது படத்தில் நடிகர் விஜயை வைத்து எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும் இதில் ஜீவாவும் உடன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பூவே உனக்காக, லவ் டூடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: இமயமலையில் அஜித்துடன் அட்வென்ச்சர் ட்ரிப் சென்ற மஞ்சு வாரியர் ! AK61 நியூ அப்டேட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....