Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இதுதான் குடும்ப படமோ' - டிரெண்டாகும் வாரிசு படக்குழுவின் 'போஸ்ட்'...

    ‘இதுதான் குடும்ப படமோ’ – டிரெண்டாகும் வாரிசு படக்குழுவின் ‘போஸ்ட்’…

    வாரிசு திரைப்படத்தின் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படம் சார்ந்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்திலும், தமன் இசையிலும் ‘வாரிசு’ பளபளப்பாக உருவாகி வருகிறது. 

    வாரிசு திரைப்படத்திலிருந்து நேற்று வெளிவந்த புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது இன்னும் அதிகமானது. மேலும், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

    வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், சினேகா, ஷியாம், சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிக மந்தனா நடித்து வருகிறார். 

    இந்நிலையில், நடிகை சங்கீதாவின் கணவரும், பிரபல பாடகருமான கிரிஷ், இயக்குநர் வம்சி உள்பட படகுழுவினருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் பரவலாக டிரெண்ட் அடித்து வருகிறது. 

     

    View this post on Instagram

     

    A post shared by SINGER KRISHH (@singerkrish)

    முன்னதாக, இயக்குநர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வாரிசு திரைப்படம் குறித்த தங்களது அனுபவத்தினை பகிர்ந்தது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: கணினி பயிற்றுநர் பணிக்கு வெளிவந்த அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....