Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்1991-ல் நடந்தது இப்போது நடக்கும்! ராஜராஜ சோழன் விவகாரத்தில் ஹெச்.ராஜா ஆவேசம்...

    1991-ல் நடந்தது இப்போது நடக்கும்! ராஜராஜ சோழன் விவகாரத்தில் ஹெச்.ராஜா ஆவேசம்…

    ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் போன்றவற்றை கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

    இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவை பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வெற்றிமாறன் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால்தான் தற்போதும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக விளங்கி வருகிறது என்றார். மேலும், ‘நம்மிடம் இருந்து நமது அடையாளங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ  சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்’ என்று கூறினார். 

    வெற்றிமாறனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல இந்துத்துவா அரசியல் கட்சிகளும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எச். ராஜா வெற்றிமாறனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்..

    இதையும் படிங்க:

    இந்நிலையில் இதுகுறித்து பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். ராஜா பேசியதாவது:

    ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் போன்றவற்றை கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும். ராஜராஜ சோழன் நூறு சதவீத ஹிந்து மதம்தான். இந்தியாவின் பிறந்த அனைத்து மதங்களும் ஹிந்து மதம் தான். சிவம், சைவம், வைணவம் என்பது வேறு வேறல்ல. அனைத்தும் ஹிந்து மதம்தான். மேலும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் ஹிந்து தான். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    மேலும், இதற்கு முன்னதாக ‘பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமாவளவன், சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்கக் கூடாது. 1991 விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பி.எப்.ஐ.,உடன் வி.சி.க., இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகள் கைக்கூலி திருமாவளவன். அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் நல்லவர். அவருக்கு சுற்றி இருப்பவர் கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்’ என்றும் எச். ராஜா தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....