Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய இளைஞர்; வனத்துறை வெளியிட்ட காணொளி

    சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய இளைஞர்; வனத்துறை வெளியிட்ட காணொளி

    உத்தர பிரதேசத்தில் சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் இளைஞர் ஒருவர் சிக்கியிருந்த காணொளியை அம்மாநில வனத்துறை வெளியிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சஹார் மாவட்டத்தில் பாசேந்துவா என்ற  கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் சிறுத்தையால் சில சமயங்களில் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 

    இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூண்டில் சிறுத்தைக்காக சேவல் ஒன்று இரையாக வைத்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அந்தக் கூண்டை கண்காணித்து வந்தனர். 

    அப்போது கூண்டில் வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கினார். பிறகு, கூண்டைத் திறக்க முடியாததால், இளைஞர் கூண்டில் இருந்து கதறினார். இவர் கதறல் சத்தம் கேட்டு வந்த வனத்துறையினர் சென்று விசாரித்தபோது சிறுத்தைக்கு இரையாக வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க முயன்றது தெரியவந்தது. 

    இது தொடர்பான காணொளியை அம்மாநில வனத்துறை வெளியிட்டுள்ளது.  

    அவசர ஊர்தியில் காலணிகள் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்; வைரல் காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....