Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம் பழுது; போக்குவரத்து நெரிசலால் கடுப்பான மக்கள்!

    காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம் பழுது; போக்குவரத்து நெரிசலால் கடுப்பான மக்கள்!

    ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற கனரக வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    சென்னையில் இருந்து ராட்சத காற்றாலை இறக்கையை கனரக வாகனம் ஒன்று ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், கனரக வாகனம் இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென பழுது அடைந்தது. 

    சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வளையாம்பட்டு மேம்பாலத்தின் மீது கனரக வாகனம் சென்றபோது பழுது அடைந்ததால், அங்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. 3 மணி நேர கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வாகனம் பழுது சரி செய்யப்பட்டு அந்த இடத்தை விட்டு சென்றது. 

    திடீர் போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

    நாளை மறுநாள் முதல் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ : சென்னை ரைனோஸ் சாதிக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....