Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கருக்கு பிரிவு உபசார விழா

    உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கருக்கு பிரிவு உபசார விழா

    உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஏ.எம்.கான்வில்கர் நேற்று (ஜூலை 29) ஓய்வு பெற்றார். 

    ஏ.எம்.கான்வில்கர் உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி பொறுப்பேற்றார். ஏ.எம்.கான்வில்கர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்தவர் ஆவார். 

    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கருக்கு பிரிவு உபசார விழா, நேற்று (ஜூலை 29)  நடைபெற்றது. இவ்விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    இவ்விழாவில் பேசிய வழக்குரைஞர் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங், அவருக்கும் ஏ.என் கான்வில்கருக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு பற்றி தெரிவித்தார்.

    மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 70 ஆக உயர்த்த வேண்டும் என்றும் விகாஸ் சிங் கோரிக்கை வைத்தார். 

    மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா காணொளி வாயிலாக இவ்விழாவில் கலந்து கொண்டார். ஹரிஷ் சால்வே, முகுல் ரோத்தகி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்களும் ஏ.எம்.கான்வில்கரின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டனர்.

    ஊடகங்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்- நீதிபதி என்.வி.ரமணா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....