Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதவறாக சித்தரிக்கப்படும் பாஜக தலைவர்களின் படங்கள்? யார் இந்த லோன் ஆப் நிறுவனம்...?

    தவறாக சித்தரிக்கப்படும் பாஜக தலைவர்களின் படங்கள்? யார் இந்த லோன் ஆப் நிறுவனம்…?

    பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

    பாஜகவின் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  தலைவராக பதவி வகித்து வந்தவர், டெல்லி கோபி. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.

    டெல்லி கோபி கடந்த 4-ம் தேதி ராயல் கேஷ் ஆப் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவர் கடனை அடைக்க வேண்டிய தேதி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கடனை அடைக்க ஒருநாள் காலதாமதமானதால், டெல்லி கோபியின் கைபேசி முழுவதும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும்,  பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபருடன் கோபியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோபியை தேடப்படும் குற்றவாளி என பதிவு செய்து டெல்லி கைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, டெல்லி கோபி விருகம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையிலேயே காவல்துறை அவரை விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த லோன் செயலி குறித்தும் தீவிர விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் புகைப்படம் அவதூறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....