Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருமண வீட்டில் ரசகுல்லாவிற்காக பறிபோன உயிர்.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

    திருமண வீட்டில் ரசகுல்லாவிற்காக பறிபோன உயிர்.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பொதுவாகவே வட இந்தியாவில் திருமணம் மற்றும் விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ரசகுல்லா உள்ளிட்ட பல இனிப்பு வகைகளை விருந்தினர்களுக்கு பரிமாறுவது வழக்கமாகும். அப்படியான ஒரு நிகழ்வில் உத்தர பிரேதேச மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

    உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள எட்மத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான் என்ற நபர். இவருடைய மகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வழக்கப்படி ரசகுல்லா பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது சிலர் தங்களுக்கு ரசகுல்லா வைக்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டகாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ‘ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி’ ட்விட் போட்ட குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

    இந்த தகராறு மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கிடையே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலர் கைக்கலப்பிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பின் இரண்டு அணி இடையே சண்டை பெரிதாகிய நிலையில், சன்னி என்ற நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    பிறகு அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்குள்ள மருத்துவர்கள் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளனர். பின், ஆக்ராவில் சிகிச்சை பெற்று வந்த சன்னி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சன்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இந்நிலையில் இதுகுறித்து எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவிக்குமார் குப்தா, “தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சன்னி, முதலில் சமூக நல மையத்துக்கு அனுப்பப்பட்டார். பிறகு அவர், ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் காயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தார். 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....