Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசபரிமலை பக்தர்களுக்கு 'ஒரு ஹாப்பி நியூஸ்' தென்னக ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

    சபரிமலை பக்தர்களுக்கு ‘ஒரு ஹாப்பி நியூஸ்’ தென்னக ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற கார்த்திகை, தை மற்றும் மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில், பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

    இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் மாதாம் 16, 23, 30, டிசம்பர் மாதம் 7, 14, 21, 28; அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 11, 18, 25ம் தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு கொல்லம் செல்லும்.

    கொல்லத்திலிருந்து நவம்பர் 17, 24, அதேபோல் டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, 29, ஜனவரி மாதம் 5, 12, 19, 26, தேதிகளில் காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    எழும்பூரில் இருந்து நவம்பர் மாதம் 18, 25, டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27ம் தேதிகளில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கொல்லம் செல்லும்.

    கொல்லத்திலிருந்து நவம்பர் மாதம் 20, 27 மற்றும் டிசம்பர் மாதம் 4, 11, 18, 25 அதேபோல் ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 தேதிகளில் காலை 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

    எழும்பூரில் இருந்து நவம்பர் மாதம் 21, 22, டிசம்பர் 5, 12, 19, 26, அதேபோல் ஜனவரி 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை7.40 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லத்திலிருந்து நவம்பர் மாதம் 22, 29, டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி மாதம் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூருக்கு வந்தடையும்.

    இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கஇங்கிலாந்தில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி..தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை விளக்கும் நிகழ்வுகள் பங்கேற்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....