Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபசுமை வீடு கட்டிய உத்தரகாண்ட்டை சேர்ந்த வங்கி ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்

    பசுமை வீடு கட்டிய உத்தரகாண்ட்டை சேர்ந்த வங்கி ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்

    சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உத்தரகாண்ட்டை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பசுமை வீடு கட்டி அசத்தியுள்ளார்.

    உலகம் முழுவதும் மாசு காரணமாக தட்பவெப்ப காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக திகழ்வது மனிதனின் செயல்பாடுகள்தான் என பல்வேறு ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் நாட்டின் முதன்மை நகரமான டெல்லியில் வாகன பயன்பாடுகளின் மிகுதியால் காற்றின் தரம் வெகுவாக மோசமடைந்துள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான சந்திரசேகர் ஷர்மா என்பவர் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தனது கனவு இல்லத்தை வடிவமைத்துள்ளார். இதற்கு ‘பசுமை வீடு’ என அவர் பெயர் சூட்டியுள்ளார்.

    இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் சந்திரசேகர் ஷர்மா கூறுகையில், மாசு இல்லாத ‘பசுமை மாளிகை’யை உருவாக்குவது எனது கனவாக இருந்தது. நான் இதற்காக 40 ஆண்டுகளாக திட்டங்களை தீட்டி வந்தேன். எனது வீட்டில் மொத்தம் 400 வகையிலான 1000-க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. என் வீட்டில் உள்ள அனைத்து காலி இடங்களையும் செடிகளை வளர்ப்பதற்காக பயன்படுத்தியுள்ளேன். தற்போது, எனது செடிகள் பூத்து, பழங்கள், காய்கறிகளை தருகிறது. மற்ற வீடுகளை விட எனது வீட்டின் உள்ளே வெப்பநிலை 5° குறைவாகவும், காற்றின் தரம் வெளியில் இருப்பதை விட நன்றாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடித் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுலா பயணிகள் விரும்பும் பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....