Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தங்க நிறத்தில் இவ்வளவு பெரிய மீனா? எங்கு சிக்கியது தெரியுமா?

    தங்க நிறத்தில் இவ்வளவு பெரிய மீனா? எங்கு சிக்கியது தெரியுமா?

    பிரான்ஸ் நாட்டில் 30.5 கிலோ எடையுள்ள கோல்ட் பிஷ் என்று சொல்லப்படும் தங்கநிற மீன் சிக்கியுள்ளது. 

    பொதுவாக கோல்ட் பிஷ் என்று சொல்லப்படும் தங்க நிற மீன்கள் சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால், பிரான்ஸ் நாட்டில் கிடைத்துள்ள மீன் 30.5 கிலோ எடையை உடையது. இந்த மீனை பிடித்த மீனவர் அதற்கு செல்ல பெயராக ‘கேரட்’ என வைத்துள்ளார். 

    பிரான்ஸ் நாட்டில் மீன்பிடிப்பு பகுதியில், இந்த தங்க நிற மீனை பிடித்த மீனவர் இதுபற்றி கூறுகையில், “கேரட் உள்ளே இருப்பது எனக்கு எப்போதும் தெரியும். ஆனால், நான் அதைப் பிடிப்பேன் என்று நினைத்ததில்லை. அது ஒரு பெரிய மீன் என்று எனக்குத் தெரியும். அது ஆரஞ்சு நிறத்தில் இருப்பதை நான் பார்த்தேன். அதைப் பிடிப்பது புத்திசாலித்தனமாக இருந்தது. அதே சமயம் அதிர்ஷ்டமும் கூட”என தெரிவித்தார். 

    மீனின் புகைப்படங்களை ப்ளூவாட்டர் ஏரிகள் (Bluewater lakes) என்ற முகநூல் பக்கம் வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களுடன், தங்கமீன் மனிதனின் உடற்பகுதியை விட பெரியதாக இருப்பதை நீங்கள் காணலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆரஞ்சு நிறத்தில் இவ்வளவு பெரிய மீன் சிக்குவது இதே முதல் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில். இந்த தங்க நிற மீனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஊட்டி போல காட்சியளிக்கும் சென்னை: இது குளிர் காலமா? இல்ல மழை காலமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....