Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வலிமை திரைப்பட வழக்கு; வெளிவந்த தீர்ப்பு இதுதான்!

    நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வலிமை திரைப்பட வழக்கு; வெளிவந்த தீர்ப்பு இதுதான்!

    வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாய் அமைந்தது, வலிமை! அஜித் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் கொண்டாட்டமாக அமைந்தாலும், வலிமை திரைப்படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களும் அதீதமாக வந்ததன. அவற்றின்படி, படத்தின் நீளமும், படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும் திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்ததாக கூறப்பட்டது. 

    சில விமர்சனங்களை ஏற்றுக்கொண்டது, படக்குழு. அதன்படி, திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாள் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி 15 நிமிடங்களுக்கான காட்சிகள் வலிமை திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதன்பிறகும் எதிர்மறை விமர்சனங்கள் வலிமையை தூரத்தியது.

    ஆனால், வலிமை திரைப்படமானது எதிர்மறை விமர்சனங்களை நொறுக்கி வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது. இப்படியான நிலையில்தான் வலிமை திரைப்படத்தின் மீதான அடுத்த பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டது. ஆம்! வலிமை திரைப்படமானது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ரோ திரைப்படத்தின் பிரதி என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. மெட்ரோ திரைப்படத்திலும் பைக்குகள் மூலம் நிகழும் நகைப்பறிப்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. விமர்சன ரீதியாக மெட்ரோ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படமும் பைக்குகள் மூலம் நிகழும் நகைப்பறிப்பை அடிப்படையாக நகரும் என்பதால் வலிமை திரைப்படத்தை மெட்ரோ திரைப்படத்தின் பிரதி (copy) என்றனர்.

    வெறுமனே பிரதி, நகல் என்று வலிமை திரைப்படம் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் ‘ வலிமை திரைப்படத்தின் கதை, கதாப்பாத்திரம் ஆகியவைகள் என்னுடைய மெட்ரோ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது’ என்று வழக்குப்பதிவு செய்தார். மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார். அதோடு, வலிமை திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதையும், சாட்டிலைட்டிற்கு விற்பதிற்கும் தடை விதிக்குமாறு கூடுதல் வழக்கையும் மெட்ரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் தொடர்ந்தார்.

    இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மற்றொரு பக்கம் வலிமை திரைப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் அவர்கள் தினமும் செய்தித்தாள்களில் இருந்து வெளிவந்த தகவலின் அடிப்படையிலேயை வலிமை கதையை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் என் நற்பெயருக்கு ஜெயகிருஷ்ணன் அவர்கள் கலங்கம் விளைவிப்பதாகவும் எச்.வினோத் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதோடு மெட்ரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் மீது பத்து கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இவ்வாறாக இரு தரப்பும் கூற, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகளை விசாரித்த செந்தில்குமார் ராமமூர்த்தி வலிமை திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது எனவும், நஷ்ட ஈடு சமந்தமான வழக்கை ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று ஒத்திவைப்பதாகவும் கூறினார். 

    இந்த அறிவிப்பினால் வருகிற 25 ஆம் தேதி வலிமை திரைப்படமானது ஓடிடியில் வெளியாகும் என்று அறியப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....