Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இலங்கையைக் கைப்பற்றப்போகுதா இந்தியா ? : இலங்கையில் புது சர்ச்சை!

    இலங்கையைக் கைப்பற்றப்போகுதா இந்தியா ? : இலங்கையில் புது சர்ச்சை!

    இலங்கை அரசு அதன் நாட்டின் கடல் பகுதிகளையும், வான் பகுதிகளையும் இந்தியாவிற்கு விற்கப்போவதாக அந்நாட்டில் புது சர்ச்சை எழுந்து வருகிறது.

    இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டு அந்நாட்டு மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு ஒரு தேநீரின் விலை 150 ரூபாய் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை 5000 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஆட்சி நடத்தி வரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இந்தியாவிடம் உதவி கோரியிருந்தார். இதன்படி இலங்கை நிதிஅமைச்சர் பாசில் ராஜபக்சே இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சென்றார். இது நடந்த இரண்டு வாரங்களில் இலங்கை அரசு கடந்த மார்ச் 21ஆம் தேதி இந்தியாவுடனான இரண்டு ஒப்பந்தகளில் கையெழுத்திட அனுமதி வழங்கியது. 

    இதைப்பற்றி பேசிய இலங்கை அமைச்சரவையின் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரனா, இந்திய அரசு இலங்கை கடல் மீட்பு பணிகளில் ஈடுபட ஒருங்கிணைந்த மீட்பு நிலையத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர் பணஉதவி அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த உடன்படிக்கையானது இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தத்தில் விருப்பம் காட்டும் இலங்கை அரசு, இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், இலங்கையில் அந்த நாட்டிக்கான ஒருங்கிணைந்த தனித்துவ  சட்டகத்தை அமைக்கவும், இந்தியா உதவி செய்வதாக ஆர்வம் காட்டியுள்ளது. அந்த திட்டத்திற்கு 300 மில்லியன் இந்திய ரூபாய் பணஉதவி செய்வதாகவும் உறுதி கூறியுள்ளது. இதற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை சட்டஅமைச்சர் விருப்பம் தெரிவிக்க இலங்கை அமைச்சகமும் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் துறைமுகங்களை விரிவாக்கம் செய்யும் இந்தியாவின் யோசனையை அமைச்சரவையில் முன்வைத்த இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பருத்திதுறை, பேசாலை, குருநகர் மற்றும் பலபிட்டி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் விருத்தி பெரும். 

    இந்த மூன்று திட்டங்களில், இரண்டு திட்டங்களில் கையெழுத்திட அங்கு இப்பொழுது பிரச்சினை உருவாகி உள்ளது. இது குறித்து பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையின் பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கையின் வான்பகுதியை விற்க முடிவு செய்துள்ளனர், கடல் பகுதியை சீனாவுக்கு விற்றார்கள், மின்சார திட்டங்களை அமெரிக்காவுக்கு விற்றார்கள், தற்பொழுது வான்பகுதியை இந்தியாவுக்கு விற்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை மக்களின் கைவிரல் அடையாளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....