பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் 70 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய மிகப் பிரபலமான புதினம் பொன்னியின் செல்வன். இப்புதினத்தை இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இரு பாகங்கள் உடைய படமாக எடுத்தார். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா, சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் 450 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை புரிந்தது.
மேலும், சில மாதங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி அன்று பொன்னியின் செல்வன் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் படம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிப்பதாகவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் 70 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் – வெளிவந்த தகவல்..