நடிகர் சிலம்பரசன் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம்தான், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், இந்த பத்து தல.
நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால், சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கூகுளில் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம்!