பொன்னியின் செல்வன் புகழ் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
‘மாயநதி’, ‘வரதன்’ போன்ற மலையாள திரைப்படங்களின் மூலம் மலையாள ரசிகர்களின் மனதை கவர்ந்தவர், ஐஸ்வர்யா லக்ஷ்மி. மலையாள திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் தருவாயிலே, இவருக்கென தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் ‘ஆக்ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ , ‘பொன்னியின் செல்வன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழக ரசிகர்களையும் பெருமளிவில் கவர்ந்தார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. இந்நிலையில், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் கீழே இதய எமோஜி ஒன்றையும் ஐஸ்வர்யா வைத்துள்ளார்.
View this post on Instagram
இதனால், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் அர்ஜூன் தாஸ் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை இருவருமே இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் வசனத்தை டிரெண்ட் செய்யும் பாஜகவினர்… காரணம்?